எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஹெல்சிங்கி, ஜூலை 17- சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரசிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா--ரஷியா உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத் தவும் அவர்கள் உறுதி எடுத்துள்ளனர். உக்ரைன், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவும், ரசியாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றன. அதே போல், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியா தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபோன்ற காரணங்களினால், தங்கள் நாட்டில் இருந்த ரசிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா அதிரடியாக வெளி யேற்றியது. ரசியா மீது பல்வேறு தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு எதிராக ரசியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், அமெரிக்கா--ரசியா இடையேயான உறவில் மிகப்பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா--ரசியா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் சந்தித்துப் பேசுவது என்று டிரம்ப்பும், புதினும் முடிவு செய்தனர். இதன்படி, ஹெல்சிங்கியில் டிரம்பும், புதினும் திங்கள்கிழமை (16.7.2018) சந்தித்துப் பேசினர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு, சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த இரு தலைவர்களும் உறுதி எடுத்தனர். மேலும், உலக விவகாரங்களில் அமெரிக்காவும், ரசியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தலைவர் கள் விருப்பம் தெரிவித்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner