எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, ஜூலை 17- 3 நாள் அரசு முறை பயணமாக வங் காளதேசம் நாட்டுக்கு வந் துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகள் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்களும் கையொப் பமானது.

வங்காளதேசம் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற இந்தியா - வங்காளதேசம் உள்துறை அமைச்சர்கள் இடையிலான ஆறாவது உயர்மட்ட ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

பயங்கரவாத ஒழிப்பு நட வடிக்கை, எல்லை பாதுகாப்பு மற்றும் எல்லை பராமரிப்பு, கள்ளநோட்டு நடமாட்டம், போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், ரோகிங்கியா அகதிகள் பிரச்சினை உள் ளிட்ட பல்வேறு விவகாரங் கள் தொடர்பாக இந்த சந்திப் பின்போது விவாதிக்கப்பட் டது.

பின்னர், செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த அசா துஸ்ஸமான் கான், நமது நாட் டில் பயங்கரவாதத்தை ஒழிக் கும் வகையில் பல்வேறு உளவு தகவல்களை இந்தியா பரிமாறி வருவதாக குறிப் பிட்டார்.

பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நமது கொள்கையின் அடிப்படை யில்  இந்தியாவுக்கு எதிரான எவ்வித பயங்கரவாத நட வடிக்கைக்கு நமது நாட்டு மண்ணை யாரும் பயன் படுத்த அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner