எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோஹா, ஜூலை 18- ஒன்று பட்ட அய்க்கிய அரபு அமீர கத்தை உருவாக்கிய 7 மன்னர் களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான சேக் ரசித் பின் அல்சாரிக், அய்க்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி நாட்டைவிட்டு வெளி யேறியுள்ளார்.

அய்க்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயி ருக்கு ஆபத்து இருப்பதால் கத் தாரில் தஞ்சமடைந்துள்ளதாக தோஹாவுக்கு இன்று வந்த டைந்த அல்சாரிக் அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்துள் ளார். அல்சாரிக்கின் குற்றச் சாட்டை அய்க்கிய அமீரக வெளி யுறவு அமைச்சர் மறுத்துள்ளார்.

அய்க்கிய அமீரக வரலாற் றில் முதன்முறையாக ஆட்சியா ளர்கள் மீது அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வெளிப்படை யாக குற்றம் சாட்டுவது இதுவே முதன்முறையாகும்.

பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி கத்தார் உட னான தூதரக ரீதியிலான உறவை கடந்தாண்டு சவூதி அரேபியா, அய்க்கிய அமீரகம், எகிப்து, பக்ரைன் உள்ளிட்ட சில நாடு கள் துண்டித்தது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner