எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூலை 18-  பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கின்றன. அவர்கள் ஆங்கில புலமை பெற்றிருக்க வேண் டும். பிரிட்டனில் வாழ்வதற் கான பொருளாதார வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின் பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தகுந்த சான்றுகளையும் சமர்ப் பிக்க வேண்டும்.

எனினும் பிரிட்டனின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கண்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், அந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எளி தாக விசா கிடைக்கும்.

நட்புநாடுகளின் பட்டிய லில் சீனா, கம்போடியா, இந் தோனேசியா, தாய்லாந்து, மெக் சிகோ, பக்ரைன், செர்பியா, டொமினிகன் குடியரசு, குவைத், மாலத்தீவு, மெக்காவ் ஆகிய நாடுகளை பிரிட்டன் அரசு சமீபத்தில் பட்டியலில் புதிதாக இணைத்தது.

எனினும், தூதரக ரீதியில் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியா இந்த பட்டியலில் இடம்பெற வில்லை. இது பிரிட்டனில் உயர்கல்வி படிக்கும் ஆசையில் இருந்த இந்திய மாணவர்க ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இந்நிலையில், லண்டன் மேயராக உள்ள சாதிக் கான் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், விசா கட்டுப்பாடு கள் தளர்த்தப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மாணவர்கள் நலன் கருதி இந்த பரிந்துரையை செய்த லண்டன் மேயர் சாதிக் கானும், பரிந்துரையை அமல் படுத்த வேண்டிய உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத்தும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner