எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிட்னி, ஜூலை 18- வெள்ளம் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் மற்றும் மயக்க மருந்து நிபுணருக்கு தாய்லாந்து அரசு முன்கூட்டியே சட்டப் பாதுகாப்பு வழங்கியதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர்களை உயிருடன் மீட்கும் மிகக் கடுமையான முயற்சியில் தோல்வி ஏற்பட் டால், அதற்காக அந்த இருவர் மீதும் வழக்குத் தொடரப்படு வதைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா வின் ஏபிசி’ தொலைக்காட்சி திங்கள்கிழமை கூறியதாவது:

தாய்லாந்து குகைக்குள் சிக் கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சி யாளரை மீட்பதற்காக, குகை வெள்ளத்தில் நீந்துவதில் சிறப் புத் தேர்ச்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ் மற்றும் நீச்சல் வீரர் கிரெயிக் சேலன் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த இருவரும், சிறு வர்களை மீட்பதில் மிக முக் கியப் பங்காற்றினர்.

எனினும், ஆபத்துகள் நிறைந்த அந்த மீட்புப் பணி யில் தோல்வி ஏற்பட்டால், அதற்காக அந்த இருவர் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படாது என்பதை உறுதி செய் வதற்காக, அவர்களுக்கு தாய் லாந்து அரசு முன்கூட்டியே சட்டப் பாதுகாப்பு வழங்கியது.

ஆஸ்திரேலியா மற்றும் தாய் லாந்து அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது என்று ஏபிசி’ தொலைக்காட்சி தெரிவித்தது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner