எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபாய், ஜூலை 19- கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த வர் ஜாபர். கடந்த 9 ஆண்டுகளாக அபுதாபியில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த இவர் கடந்த வாரம் திடீரென்று காணாமல் போனார்.

இதுதொடர்பாக காவல்துறை யில் புகார் அளிக்கப்பட்டு, தேடி வந்த நிலையில் அபுதாபி புற நகர் தொழிற்பேட்டை பகுதியான முசாஃபா என்னும் இடத்தில் ஜாபரின் உடல் கிடைத்தது. அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட் டிருந்த உடலினை ஜாபரின் சகோதரர் முனீர் நேற்று அடை யாளம் காட்டினார்.

திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான ஜாபரின் மரணத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கியூபாவில் முதன் முறையாக

செல்போனில் இணைய தள வசதி

ஹவானா, ஜூலை 19- 50 ஆண்டுகால இணைய தள வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இணைய தள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. காலையில் கண் விழிப்ப தில் இருந்து இரவில் கண் மூடி தூங்கும் வரை எப்போதும் 4ஜி வேகத்தில் செல்போனில் இணைய தள வசதியை பயன்படுத்தும் இந்தியர்களுக்கு இது ஆச்சரியமான வி‌சய மாக இருக்கலாம்.

ஆனால் பல மாற்றங்களை கண்டிருக்கும் கியூபா இப் போது தான் முழு இணைய சேவை (இன்டர் நெட்) வசதியை பெற உள்ளது. இந்த மாற்றத்துக்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.

அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்த கியூபா சோவியத் ரசியா உடைந்த சில மாதங்களில் பெரிய பாதிப்பை சந்தித்தது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி பெற்றன.

ஆனால் எதிரி நாடான அமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளது. தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் மட்டுமே உள்ளது. அதில் வீடியோக்கள் பார்க்க முடியாது. பயன்படுத்தும் நெட்வொர்க் கும் மிக மெதுவாக இருக்கும். அந்த நெட் வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அங்கு உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் கிடையாது. ஏனெனில் அங்கு தொலை தொடர்பு சாதனங் களை விற்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனால் அங்கு இணையம் (நெட்வொர்க்) என்பது ஒரு பெரிய ஆடம்பர கனவு போல இருந்தது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner