எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூலை 19- அய்ரோப் பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட் டன் விலகுவதற்கான பிரெக் ஸிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோ சிக்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் பிரிட்டன் அதிகா ரப்பூர்வமாக விலகி விடும் என் பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அய்ரோப் பிய யூனியனுடன் நடத்தப் பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை விட்டு விலகினார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், அய்ரோப் பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விசயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற் றம் சாட்டியிருந்தார்.

டேவிட் பதவி விலகல் செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை விட்டு விலகினார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் பதவி விலகல் பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரசா மே கையாளும் முறையில் ஏற் பட்ட அதிருப்தி காரணமாக அவர் பதவி விலகியதாக கூறப் பட்டது.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரசா மே-வை வெளிப்படையாக விமர் சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா, “என் பின்னால் நின்று எனக்கு ஆதர வாக இருங்கள். இல்லையெ னில் பிரெக்சிட் ஒருபோதும் நிறைவேறாது”என எச்சரிக்கை விடுத்தார்.

இவ்வாறாக, சொந்த கட்சியிலேயே எதிர்ப்பும் ஆதரவும் கலந்து இருந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் தொடர் புடைய வர்த்தக மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் பிரதமர் தெரசா மே நேற்று தாக்கல் செய்தார். 318 உறுப்பினர்கள் மசோதா வுக்கு ஆதரவாகவும் 285 பேர் மசோதாவை எதிர்த்தும் வாக்க ளித்தனர்.

கீழ் சபையில் நிறைவேற்றப் பட்டுள்ள மசோதா, மேல் சபையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டமாகும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner