எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போனஸ் அயரிங், ஜூலை 19- அர் ஜென்டினா நாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது காளைக்கு பிரான்சு கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மாப்பே-வின் பெயரை சூட்டி யுள்ளார். அந்த காளை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி வெற்றி பெற் றது. முன்னதாக நடந்த நாக்- அவுட்டில் அர்ஜென்டினா அணியை, பிரான்சு அணி தோற் கடித்தது. இப்போட்டியில், பிரான்சின் மாப்பே 2 கோல்கள் அடித்து, அர்ஜென்டினாவை வெளியேற்றினார்.

நம் ஊர்களில் ஆடு, மாடு உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு நடிகர்கள் உள் ளிட்ட பிரபலங்களின் பெயர் களை வைப்பது வழக்கம். அதுபோல அர்ஜென்டினாவில் பாரம்பரிய கிராம கால்நடை திருவிழா நாளை தொடங்கு கிறது.

இதில் பங்கேற்பதற்காக முதலில் பதிவு செய்யப்பட்ட காளையின் பெயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கால்பந்து ரசிகர் ஒருவர், பிறந்து 22 மாதங்களான தனது காளைக்கு மாப்பே என பெய ரிட்டுள்ளார். அர்ஜென்டினா அணியின் தோல்விக்கு காரண மான, எதிரணி வீரரின் பெயரை வைத்ததுள்ளதால் அந்த காளை தற்போது பிரபலமாகி வருகிறது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner