எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரெஸ்ஸல்ஸ், ஜூலை 20- கூகுள் நிறுவனத்துக்கு அய்ரோப்பிய யூனியன் ரூ.34,265 கோடி (4.3 பில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி இயங்குதளத்துக்கு உள்ள செல்வாக்கை செல்லிடப்பேசி சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அய்ரோப்பிய யூனியனின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் இதனை தெரிவித்தார். முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது இணைய தள சேவையில் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னு ரிமை அளிப்பது, பிற நிறுவனங்களை மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதான குற்றச்சாட்டில் கடந்த 2017-இல் ஏற்கெனவே ரூ.19 ஆயிரம் கோடிஅபாரதம் விதிக்கப்பட்டி ருந்தது. இப்போது, அது தொடர்பாக மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்தி கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது. இதனை எதிர்த்து கூகுள் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

இணையதளத்தில் பொருள்களை வாங்குவதற்காக வாடிக் கையாளர்கள் கூகுள் மூலம் தேடும்போது, தங்களுக்கு வேண் டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.

அமெரிக்கா: பயிற்சி விமானங்கள் மோதி இந்திய இளம்பெண் உள்பட 3 பேர் பலி


மியாமி, ஜூலை 20- அமெரிக்கா வின் ஃப்ளோரிடா மாகாணத் தில் நடுவானில் 2 பயிற்சி விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்திய இளம்பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து மியாமி ஹெரால்ட் இணையதளத்தில் வெளியான செய்தி வருமாறு:

மியாமி நகரில் உள்ள விமானி பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான 2 சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் விமானங்கள் மோதிக்கொள்வதை செல்லிடப்பேசியில் விடியோவாக பதிவு செய்தார். அவர் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களின் அடை யாளம் தெரியவந்தது. இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் நிஷா செஜ்வால், ஜார்ஜ் சன்செஸ் (22), ரல்ப் நைட் (72) ஆகியோர் உயிரிழந்தனர்.

இரண்டு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner