எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜோகஸ்பெர்க், ஜூலை 20- தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும், அந் நாட்டு தந்தை என அழைக் கப்படுபவருமான நெல்சன் மண்டேலாவின் 100-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டா டப்பட்டது.

அந்நாட்டின் ஜோகன்னஸ் பர்க் நகரில் நடைபெற்ற பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் 15,000 மக்கள் பங்கேற்றனர்.

1990-ஆம் ஆண்டில் சிறை யில் இருந்து மண்டேலா விடு தலையானபோது, உலகெங்கி லும் வாழும் மக்களின் இதயங் களில் நம்பிக்கை அலை பிறந்த தாக ஒபாமா நினைவுகூர்ந்தார்.

தமது தியாகம், ஈடு இணையில்லா தலைமை பண்பு ஆகி யவற்றாலும், நல்லொழுக்கத் துக்கான எடுத்துக்காட்டாக இருந்ததாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக உரு வெடுத்தவர் மண்டேலா என ஒபாமா குறிப்பிட்டார்.

மண்டேலாவின் வழி வந்த வரும், தென் ஆப்பிரிக்காவின் தற்போதைய அதிபருமான சிரில் ராமபோஸா, மண்டே லாவுக்கு புகழாரம் சூட்டினார். மண்டேலாவின் 100-ஆவது பிறந்த நாளை ஒட்டி, தமது ஊதியத் தில் பாதியை அறக்கட்டளை பணிகளுக்கு கொடையாக அளிக்க இருப்பதாகக் கூறிய அவர், மற்ற தலைவர்களும் இதைச் செய்ய முன்வர வேண் டும் என்று கேட்டுக் கொண் டார்.

கிழக்கு கேப் மாகாணத்தில், மண்டேலாவின் சொந்த ஊரான வெஸஸா நகரில், மருத்துவ மனை திறப்பு, செடிகளை நடுவது, முதியோர்களுக்கு போர்வை வழங்குவது உள் ளிட்ட நலத்திட்ட பணிகளை யும் அதிபர் ராமபோஸா நடத்தி முடித்தார்.

மண்டேலாவின் மனைவி மைக்கேல் கிராசா, அவரது புகழை பரப்பும் வகையில், சிறு நடைபயணம் ஒன்றை மேற்கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner