எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அங்காரா, ஜூலை 21 துருக்கியில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்த நெருக்கடி நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

துருக்கி நாட்டில் அதிபர் தாயீப் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் ஒரு பிரி வினர் முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சி, பொதுமக்களின் ஆதரவுடன் அதிபரால் வெற்றி கரமாக முறியடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அங்கு உடனடியாக நெருக்கடி நிலையை அதிபர் எர்டோகன் கொண்டு வந்தார். இது அங்கு 2 ஆண்டு களாக அமலில் இருந்து வந்தது.

நெருக்கடி நிலையின்போது, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பு உடையவர்கள் என்று கருதி பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்; பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் எர்டோகன் அமோக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மேலும், அந்த நாடு அதிபர் ஆட்சி முறைக்கும் மாறி உள்ளது.

அதிபர் தேர்தலில் அங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்தபோது, தங்களது வேட் பாளர் வென்றால் நாட்டில் நெருக் கடி நிலை உடனே அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தன.

இந்த நிலையில் அதிபர் எர்டோகன் நேற்று முன்தினம் அங்கு நெருக்கடி நிலையை முடி வுக்கு கொண்டு வந்தார்.

இருந்த போதிலும், அங்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner