சிங்கப்பூர், ஜூலை 22- சிங்கப்பூரின் மிகப் பெரிய மருத்துவக் கூட்டமைப்பினுடைய தகவல் களஞ்சியத்துக்குள் இணைய தளம் மூலம் ஊடுருவி, அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் உள்ளிட்ட 15 லட்சம் பேரின் மருத்துவக் குறிப்புகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்ஹெல்த்’ என்ற அந்த அமைப் பில் நிகழ்த்தப்பட்ட இந்த ஊடுருவல், சிங்கப்பூர் வரலாற்றிலேயே மிக மோச மான இணையதள தகவல் திருட்டு என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகமும், தகவல் தொடர்பு அமைச்சகமும் கூட்டாக வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளதாவது:
சிங்கப்பூர் பொது மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத் துவமனை, செங்காங் மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டமைப்பான சிங் ஹெல்த்’, சிங்கப்பூரின் மிகப் பெரிய மருத்துவ அமைப்பாகும்.
இந்த அமைப்பின் தகவல் களஞ்சியத்துக்குள் அண்மையில் இணைய தளம் மூலம் ஊடுருவிய நபர்கள், சுமார் 15 லட்சம் பேர் தொடர்பான மருத்துவக் குறிப்புகளைத் திருடியுள்ள னர். அந்த 15 லட்சம் பேரில், பிரதமர் லீ சியென் லூங்கும் ஒருவர் ஆவார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி முதல், இந்த மாதம் 4-ஆம் தேதி வரை அவ்வப்போது மருத்துவ மனையில் தங்கியிருந்த அந்த 15 லட்சம் பேரின் மருத்துவ ஆய்வு விவரங்கள், உடல்நலம் குறித்த தகவல்கள், மருத்து வரின் குறிப்புகள் ஆகியவை களவாடப் பட்டுள்ளன. எனினும், அத்தகைய தக வல் களஞ்சியத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள எந்தத் தகவலையும், ஊடுரு வல்காரர்கள் திருத்தவோ, அழிக்கவோ இல்லை.
பிரதமர் லீ சியென் லூங் தொடர்பான மருத்துவ விவரங்களை மட்டும் மர்ம நபர்கள் மீண்டும் மீண்டும் ஊடுருவி சேகரித்துள்ளனர்.
நோயாளிகளின் பெயர்கள், அவர்க ளது தேசிய பதிவு அடையாள எண், முகவரி, பாலினம், இனம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் களவாடப் பட்டுள்ளன.
இந்த மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு தகவல் திருட்டு நிறுத்தப்பட்டது. எனி னும், இதுகுறித்து காவல்துறையினரி டம் புகார் தெரிவித்துள்ளோம் என்று அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.