எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

கொழும்பு, ஜூலை 22- இந்தியாவுக்கான இலங்கை தூதராக தற்போது சித்ராங்கனே வாகிஸ்வரா பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தர விட்டுள்ளார். எனினும், உயர் பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் அவர் பொறுப்பேற்பார்.

மைத்ரிபால சிறீசேனாவிடம் செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ சமீபத்தில் பதவி விலகியிருந்தார். மேலும், அதிபரின் ஆலோசகராகவும் கிழக்கு மாணத்தின் ஆளுநராகவும் ஆஸ்டின் பணியாற்றியிருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

ஃபிஜி-இந்தியரை ஒப்படைக்க மறுப்பு

துருக்கி, ஜூலை 22- இசுலாமிய தேச (அய்.எஸ்.) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஃபிஜி நாட்டு இந்திய வம்சாவளி இளைஞர் நீல் பிரகாஷை ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிரியா எல்லை வழியாக துருக்கிக்குள் கடந்த 2016-ஆம் ஆண்டு நுழைந்தபோது அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நீல் பிரகாஷ், அய்.எஸ். அமைப்புக்கு ஆட்க ளைச் சேர்த்த குற்றத்தை விசாரணையின்போது ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய எல்லையில் போர் ஒத்திகை

சீனா, ஜூலை 22- இந்தியாவையொட்டிய திபெத் பகுதியில், சீன சிறப்பு ராணுவப் படையினர் இரண்டாவது முறையாக போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்தியாவுடன் போர் ஏற்பட்டு, இந்திய ராணுவம் திபெத்துக்குள் 4,000 மீட்டர் வரை ஊடுருவினால், அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு வீரர்களைத் தயார்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது வழக்கமான நடைபெறும் ஒரு போர் ஒத்திகையே என்றும் அவர்கள் கூறினர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner