எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வாசிங்டன், ஜூலை 23- நியூ யார்க்கில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் வழக்குரைஞர் மைக்கெல் கொஹெனின் அலுவலகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் எப்.பி.அய். சோதனை நடை பெற்றது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டேப் ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொண்ட பதிவு உள்ளது என தகவல் வெளியாகியது.

அந்த டேப் பதிவில், டிரம் புடன் உறவு வைத்துக் கொண் டதாக கூறும் கரென் மெக் டொகல் எனும் முன்னாள் ப்ளே பாய் மாடலுக்கு பணம் அளிப் பது தொடர்பாக, டிரம்ப் மற் றும் கொஹென் பேசிக் கொண் டது பதிவாகியுள்ளதாக அமெ ரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், ஊடகங்கள் தெரிவிக்கும் கொஹெனின் ஆடியோ டேப் போலியானது என இந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக ட்விட்டரில் அவர் பதி விட்டுள்ளதாவது :-

“ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்தை அரசாங்கமே உடைக்கும் என்பது வியப்பாக உள்ளது, அந்த வழக்குரைஞர் அவருடைய வாடிக்கையாளரை பற்றி முற்றிலும் கேள்விப் படாத & ஒருவேளை சட்ட விரோதமான ஒரு விஷயத்தை டேப் செய்தார் என்பது அதை விட வியப்பாக உள்ளது. இதில், நல்ல செய்தி என்பது உங்களின் மனம் கவர்ந்த அதிபர் எந்த தவறான செயல்களிலும் ஈடு படவில்லை என்பது தான்.”

இவ்வாறு டிரம்ப் தன் மீதான ஊடகங்களின் குற்றச் சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner