எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

லண்டன், ஜூலை 24- சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவ தாக, பிரிட்டனின் ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணர்கள் தெரி வித்துள்ளதாவது: தவறான செய்திகளையும், தகவல்களை யும் பரப்புவதன் மூலம் பொது மக்களின் கருத்துகளை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப திசை திருப்பும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதற்கு முகநூல், சுட்டுரை (டுவிட்டர்), கட்செவி (வாட்ஸ் அப்) போன்ற சமூக ஊடகங்கள் மிகப் பெரிய அளவில் பயன் படுத்தப்படுகின்றன.

பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளும், அரசியல் கட்சிகளுமே இத்தகைய செய லில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்காக, கோடிக்கணக் கான டாலர்களை அந்த அமைப் புகள் முதலீடு செய்துள்ளன.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்யான செய் திகள் பரப்பப்படுவதற்கு எதி ராக எவ்வளவு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டாலும், அத்தகைய செயல்க ளில் ஈடுபடும் அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இணையதளத்தைப் பயன் படுத்தி பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற் காக பல்வேறு ஜனநாயக நாடு களில் புதிய சட்டங்கள் இயற் றப்பட்டுள்ளன.

எனினும், அமைப்பு ரீதியிலான முறையில் சமூக ஊடங்களில் ஊடுருவி பொய்த் தகவல்களைப் பரப்பும் நாடு களின் எண்ணிக்கை 28-லிருந்து தற்போது 48-ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலும் தேர்தல் நேரங்களில் மக்களின் கருத்து களை தங்களுக்கு ஆதரவாக திரட்டுவதற்காக அரசியல் கட்சிகள் இந்தச் செயலில் ஈடுபடுகின்றன. அய்ரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்சிட்) குறித்து நடந்த பொதுவாக் கெடுப்பு, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

போலியான சமூக வலை தளக் கணக்குகளை கட்டற்ற எண்ணிக்கையில் உருவாக்கி, பொய் தகவல்களைப் பரப்பும் செயலிகள் (“போட்’கள்) தற்போது வெற்றியைத் தேடித் தரும் மிகச் சிறந்த பிரச்சார உத்தியாக மாறிவிட்டன என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner