எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

இசுலாமாபாத், ஜூலை 24- பாகிஸ் தானின் பதற்றம் நிறைந்த கைபர்-பக்துன்கவா மாகாணத் தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தலை மையிலான தெஹ்ரீக்-ஏ-இன் ஸாஃப் கட்சி வேட்பாளரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற் கொலைத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்த மாகா ணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்ட காவல்துறை அதிகாரி மன்சூல் அஃப்ரிடி கூறியதாவது:

வரும் 25-ஆம் தேதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சியின் சார்பில் பிகே-99 தொகுதி வேட்பாளராக இக்ரமுல்லா காந்தாபூர் அறி விக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று திரும் பிக் கொண்டிருந்த அவரது காருக்கு அருகே வந்த பயங்க ரவாதி, தனது உடலில் பொருத் தியிருந்த வெடிகுண்டை வெடிக் கச் செய்தார்.

இதில் படுகாயமடைந்த இக்ராமுல்லாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச் சைப் பலனின்றி அவர் உயிரி ழந்தார். இந்தத் தாக்குதலில் இக்ராமுல்லாவின் கார் ஓட்டு நரும் உயிரிழந்தார்; அவரது பாது காவலர் 3 பேர் படுகாயம டைந்தனர் என்றார் அவர்.

கைபர்-பக்துன்கவா மாகா ணத்தில் நடைபெற்று வரும் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சி அரசில் விவசாயத் துறை அமைச் சராக இக்ராமுல்லா பொறுப்பு வகித்து வந்தார்.

இதற்கிடையே, ஜாமியத்-உலேமா-இஸ்லாம்-பஸல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அக்ரம் கானை படுகொலை செய்வதற்கு நடந்த மற்றொரு முயற்சியில், அவர் உயிர் தப் பினார்.

கடந்த 10 நாள்களில் அவ ரைக் கொல்வதற்காக நடை பெற்ற இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner