எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஜூலை 24- பனாமா ஆவண ஊழல் வழக் கில் சிறைத் தண்டனை அனு பவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், சிறையில் உள்ள பெண்களுக்கு கல்வி பயிற்று விக்கத் தெரிவித்திருந்த விருப் பத்தை அதிகாரிகள் நிராகரித் தனர்.

இதுகுறித்து ஷெரீஃப் குடும்ப வழக்குரைஞர் அம்ஜத் பெர்வாய்ஸ் கூறியதாவது:

ராவல்பிண்டி அடியாலா சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு கல்வி பயிற்றுவிக்க மரியம் நவாஸ் விருப்பம் தெரிவித்தார்.

எனினும், அதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். மரியம் நவாஸ் கடுங்காவல் தண்டனை பெற்றிருப்பதால், சிறையில் மற்ற கைதிகளைச் சந்திக்க அவருக்கு அனுமதி இல்லை என்று அவரிடம் அதிகாரிகள் நினைவுபடுத்தினர் என்றார் அவர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள அவென்ஃபீல்டு வளாகத்தில் குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதையடுத்து, அந்த மூவரும் ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் காட்டுத் தீ: வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற எச்சரிக்கை

டொரண்டோ, ஜூலை 24- கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்கு சுமார் 7 இடங் களில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

எனவே அங்குள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அங்கு ஏராளமான பெரிய திராட்சை தோட்டங்கள் உள்ளன.

எனவே இவற்றை காட்டுத் தீயில் இருந்து மீட்கும் நட வடிக்கையில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏரிகளில் இருந்து நீர் எடுத்து இவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.

இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவுவதால் வீடுக ளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின்கம்பங்கள், மின் கம்பி கள் எரிந்து நாசமாகி விட்டன. எனவே பல பகுதிகள் இரு ளில் மூழ்கியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner