எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

லண்டன், ஜூலை 24- உலகக் கோப்பை மகளிர் ஆக்கிப் போட்டி லண்ட னில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஏபிரிவில் உள்ள நடப்பு வாகைய ரான நெதர்லாந்து,- தென் கொரியா அணிகள் மோதின.

இதில் நெதர்லாந்து 7--0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி 3--0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற் கடித்து சி பிரிவில் நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 6--2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் விளையா டும் இந்திய அணி தொடக்க ஆட் டத்தில் இங்கிலாந்துடன் டிரா செய்து இருந்தது. 2-ஆவது ஆட்டத்தில் அயர் லாந்தை 26-ஆம் தேதி சந்திக்கிறது.

திருப்பூர், ஜூலை 24- தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 128 கபடி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற தொரு பரபரப்பான 10 நாட்கள் போட்டித் தொடரான ஏசியன் பெயிணட்ஸ் டிராக்டர் எமல்ஷன் பாரத் சூப் பர் லீக் கபடிப் போட்டி நடைபெற்றது.

பிரம்மாண்டமான இறுதிச் சுற்றில், சென்னை மாவட்ட அணி கோப்பையை வென்று கொண்டாடியது மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் டிராக்டர் எமல்ஷன் பாரத் சூப்பர் லீக் கபடி தமிழ்நாடு பிரிவின் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இத்தகையதொரு வாய்ப்பினை அமைத் துத் தந்ததற்கு தங்களது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். வெற்றிபெற்ற அணிக்கு ரூ.51,000 மதிப்பிலான ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது மற்றும் இரண்டாம் இடம் பிடித்த திருச்சி மாவட்ட அணிக்கு ரூ.31,000 மதிப்பிலான ரொக்கப்பரிசு வழங் கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner