எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூலை 25- அய்ரோப் பிய யூனியனில் இருந்து வில கும் முடிவை ஆதரித்து பிரிட் டனின் மக்கள் பெருவாரியாக வாக்களித்த பின்னர், அய்ரோப் பிய யூனியனிடம் இருந்து பெற வேண்டிய இழப்பீடு உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோ சனையில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி எம்.பி.க் கள் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், எனது முடிவுகளை ஆதரிக்காவிட்டால் ஒருநாளும் பிரெக்சிட் நிறைவேறாது. குறு கிய காலத்தில் நாடாளுமன்ற தேர்தலை நீங்கள் சந்திக்க நேரி டும் என தெரசா மே மிரட்டி யதில் எதிர்ப்பு சற்றே தணிந்து உள்ளது.

இந்நிலையில், தற்போ தைய நிலவரப்படி, உலகில் மிகவும் ‘டென்சனான’ பிரதமர் பதவியை வகிக்கும் நீங்கள் உங்கள் மன உளைச்சல்களில் இருந்து எப்படி ஆசுவாசப் படுத்தி கொள்கிறீர்கள் என்னும் கேள்விக்கு தெரசா மே சமீபத்தில் பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்தின் வடக்கு பகு தியில் உள்ள நியூகேஸ்ட்டில் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு சென்ற தெரசா மேவிடம் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, ‘ஓய்வு மற்றும் விடுமுறை நேரங்களில் எனது கணவருடன் சேர்ந்து நடக்கப் பிடிக்கும்.

நாம் சாப்பிடும் பொருளை நாமே சமைப்பது என்ற வகை யில் சமையலில் மிகவும் ரச னையோடு ஈடுபடுவேன். நல்ல சமையல் குறிப்புகளுடன் கூடிய சுமார் 150 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. அதே போல், காவல்துறை வாழ்க் கையை மய்யமாக வைத்து அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்.சி.அய்.எஸ். தொடரை பார்ப்பதும் எனக்குப் பிடிக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner