எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூலை 26- சேலம் சென்னை எட்டு வழிச்சாலையை அமைக்க மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டு அதிமுக அரசும் முடிவு செய்துள்ளதை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லண்டன் பெரியார் அம் பேத்கர் படிப்பு வட்டம்(றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ கினீதீமீபீளீணீக்ஷீ ஷிtuபீஹ் சிவீக்ஷீநீறீமீ) தோழர்கள் ஒருங்கிணைக்க, தமிழ் தோழமை(ஜிணீனீவீறீ ஷிஷீறீவீபீணீக்ஷீவீtஹ்) அமைப்பும், அய்க்கிய ராச்சிய தமிழ் மக்கள் (ஜிணீனீவீறீ றிமீஷீஜீறீமீ வீஸீ ஹிரி) அமைப்பும் ஒன்றிணைந்து இந்தப் போராட் டத்தை முன்னெடுத்தனர்.

இங்கிலாந்து வாழ் தமிழர் களின் கூட்டாக விடுத்த அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது:

கனிம வளங்கள் மக்களின் பொதுச்சொத்து. ‘நிலம்’ மக்க ளின் பொருளாதார உரிமை.

தமிழ்நாட்டில் 5 மாவட்டங் களை சேர்ந்த மக்கள், இந்த எட்டு வழி சாலை வருவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறது என்றும், தங்க ளின் விவசாய நிலங்கள் பறி போகிறது என்றும், எட்டு வழி சாலையை கடுமையாக எதிர்க் கிறார்கள். மக்களாட்சியில் மக் கள் கருத்துக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். மக்கள் வாக்கு செலுத்தியே மாநில மற்றும் மத்திய அரசாங்கம் உருப்பெறுகிறது. மக்களே அர சாங்கங்களின் அச்சு. அந்த மக் களின் கருத்துக்கே மதிப்பில்லை என்பது மக்களாட்சிக்கே விரோ தமானது.

சேலத்தில் உள்ள மலைக ளில் இரும்புத் தாது இருப்பதை எடுக்க ஆளும் அதிமுக அரசு, ஜிண்டால்(யிவீஸீபீணீறீ ஷிtமீமீறீ & றிஷீஷ்மீக்ஷீ லிtபீ) எனும் தனியார் நிறு வனத்துடன் ஒப்பந்தம் போட் டுள்ளது. இந்த தனியார் நிறுவ னம் தமிழக மக்களின் பொதுச் சொத்தை கொள்ளை அடிக்க ஏதுவாக, அதாவது இரும்புத் தாதை எடுத்து செல்லவே இந்த எட்டு வழிசாலை அமைக்கப்படு கிறது என்பது புலப்படுகிறது. பொதுச்சொத்தை நாசப்படுத்தக் கூடாது சூறையாடக் கூடாது என்பது பொதுமக்களுக்கான ஒழுக்கம் மட்டும் அல்ல. அது பொதுமக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்திற்கும் பொருந்தும்.

மக்களின் பொதுச் சொத்தை சூறையாட வழிகோலுகிற, மக்கள் விரும்பாத, மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற, மக்களின் நிலத்தை பறிக்கிற, மக்களின் வரிப்பணத்தை பெற்று மக்களின் ஊழியராக இயங்கும் அரசாங்கம், கார்ப்ப ரேட் ஊழலுக்கு வழிவகுத்தி டும் இந்த எட்டு வழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவி டக் கோருகிறோம்.

மக்களாட்சியில் பேச்சு ரிமை என்பது அடிப்படை. எட்டு வழிச்சாலை அமைக்க ஜனநாயக வழியில் இதுவரை யில் போராடிய பல தோழர் களை கைது செய்த தமிழக அதிமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய் யப்பட்ட தோழர்களை விடு தலை செய்யவும், அவர்கள் மேல் போடப்பட்ட வழக்கு களை திரும்பப்பெறவும் வலி யுறுத்துகிறோம்.

அதே போல, இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரித்து வளர்ச்சிக்கு எதிராக செயல்படும், மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசையும், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களை யும் வன்மையாக கண்டிக்கி றோம்.

இவ்வாறு பெரியார் அம் பேத்கர் படிப்பு வட்டம், லண் டன் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner