எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 27- அமெ ரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார் லோட் நகரில், நகராட்சி கூட் டம் நடந்தது.

பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் வித்தியாச மான முறையில் ஒரு திரு மணமே நடந்துவிட்டது.

இந்த நகராட்சி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த கவுன்சிலர் வைபவ் பஜாஜ், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கவுன்சிலர் டிம்பிள் ஆஜ்மெராவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

அதை ஆஜ்மெராவும் உட னடியாக ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து நக ராட்சி கூட்டத்திலேயே சபை யின் மய்யப்பகுதிக்கு வைபவ் பஜாஜ் வந்து முழங்காலில் நின்றவாறு ஆஜ்மெராவுக்கு மோதிரம் கொடுத்து திரு மணம் செய்தார்.

திருமணம் முடித்த சூட் டோடு சூடாக அந்த தம்ப தியர் அன்பு முத்தம் பரிமாறிக் கொண்டனர். சக கவுன்சி லர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுபற்றி டிம்பிள் ஆஜ்மெரா டுவிட்டரில் வேடிக் கையுடன், “சக கவுன்சிலர் களே, இந்த தீர்மானத்தில் யாருக்கேனும் ஆட்சேபம் இருக்கிறதா? ஏனென்றால் இரு தரப்பு ஒப்பந்தத்தில்தான் வைபவ் பஜாஜ் நம்பிக்கை வைத்து உள்ளார். முக்கிய மான விஷயம், குடும்பம் சார்ந்த, அன்பான, கருணை உள்ள ஒரு வாழ்க்கைத்துணை வர் எனக்கு கிடைத்ததற்காக நன்றி செலுத்துகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner