எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஜூலை27 பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர் தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக் கெட் வீரர் இம்ரான் கான் தலை மையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ -இன்சாப் (பிடிஅய்), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முசுலிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன் னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மகன் பிலவல் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாத கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.

நேற்று முன்தினம் மாலையில் வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணி இரவே தொடங்கியது. இதில், நேற்று நிலவரப்படி, பிடிஅய் 86 இடங்களில் வெற்றி பெற்று 34 இடங்களில் முன்னிலை வகித்து 120 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் நவாஸ் ஷெரீப் கட்சி 43 இடங் களில் வெற்றி பெற்று 18 இடங் களில் முன்னிலை வகித்தது. பிபிபி 18 இடங்களில் வெற்றி பெற்று 22 இடங்களில் முன் னிலை பெற்றிருந்தது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன. இதில் 272 பேர் மக்க ளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இதில் 137 இடங் களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்க முடியும்.

தற்பொழுதுள்ள நிலவரங் களின்படி, எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவை யான இடங்கள் கிடைக்கவில்லை. எனினும், இம்ரான்கான் தலை மையிலான பிடிஅய் கட்சி வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நாட்டின் அடுத்த பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 60 இடங்கள் பெண் களுக்கும், 10 இடங்கள் மத சிறு பான்மையினருக்கும் ஒதுக்கப் பட்டு, தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப் படையில் அவர்கள் நியமிக்கப் படுவார்கள்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ் தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவை களுக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தலின் போது, சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பேரும், பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேரும் பலியாயினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner