எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஜூலை 28  பாகிஸ்தானில் இம்ரான் கான் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில், கடந்த 25ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக் துங்க்வா ஆகிய மாகாணங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளும், சில பயங்கரவாத அமைப்புகளும் போட்டியிட்டன.

ஆனால் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முசுலிம் லீக் கட்சி (பி.எம்.எல்என்), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்இஇன்சாப் கட்சி (பி.டி.அய்.), முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) ஆசிய கட்சிகளுக்கு இடையேதான் மும்முனை போட்டி நிலவியது.

மனித வெடிகுண்டு தாக் குதல், வன்முறை சம்பவங்கள் என பரபரப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி யுடன் முடிவடைந்தது. உடனே வாக்கு எண்ணிக்கை தொடங் கியது. இதில் தொடக்கம் முதலே எந்த கட்சிக்கும் போதிய பெரும் பான்மை கிடைக்கவில்லை. எனி னும் இம்ரான்கானின் பி.டி.அய். கட்சி அதிகமான இடங் களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 95 சதவீதம் முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 110 இடங்களில் பி.டி.அய். கட்சியும், 63 இடங் களில் பி.எம்.எல்.என் கட்சியும், 42 இடங்களில் பி.பி.பி. கட்சியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

இன்னும் 19 தொகுதிகளில் மட்டும் முடிவுகள் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப் படவில்லை.  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில் 272 இடங்களுக்கு நேரடியாக தேர்தல் நடத்தப்படுகிறது.

மீதமுள்ளவற்றில் 60 இடங் கள் பெண்களுக்கும், 10 இடங்கள் மத சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த 70 இடங்களும், நேரடி தேர்தலில் 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறும் கட்சிகளின் பிரதிநிதித்துவ விகிதாச்சார அடிப் படையில் நிரப்பப்படுகிறது.எனவே அங்கு ஆட்சியமைக்க 172 இடங்களை ஒரு கட்சி பெற வேண்டும். குறிப்பாக நேரடி தேர்தலில் குறைந்தபட்சம் 137 இடங்களை யாவது அந்த கட்சி பெற்றிருக்க வேண்டும்.

அந்தவகையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. எனினும் அதிக இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பி.டி.அய். சார்பில், அதன் தலைவர் இம்ரான்கான் பாகிஸ் தானின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டணி அமைத்தால் மட்டுமே இம்ரான் கான் பிரதமர் ஆகும் நிலை  உள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner