எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

கொழும்பு, ஜூலை 28 இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 168 படகுகளை அந்நாட்டு நீதிமன்றங்கள் விடுவித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கேசவ் கோகலே இரண்டு வாரங் களுக்கு முன்னர் அரசமுறைப் பயணமாக இலங்கை சென்றி ருந்தார். அப்போது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி சேனா, பிரதமர் ரணில் விக்ர மசிங்கே மற்றும் வெளி யுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இந்திய அரசின் சார்பாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகு களை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் 2015ஆ-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலுமான 4 ஆண்டுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகு களை விடுவிக்கப் பரிந்துரை செய்தது.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர் காவல்துறை நீதிமன்றம் 38 படகுகளையும், மன்னார் நீதி மன்றம் 12 படகுகள் என 50 படகுகளை முதற்கட்டமாக புதன்கிழமை மாலை விடு வித்து உத்தரவிட்டன. தொடர்ந்து வியாழக்கிழமை ஊர்காவல்துறை நீதிமன்றம் 98 படகுகளையும், பருத்தித்துறை நீதிமன்றம் 18 படகுகளையும், மல்லாகம் நீதிமன்றம் 2 படகுகள் என மொத்தம் 168 படகுகளை விடுவித்து உத்தர விட்டன.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு தற்போது மன் னார், யாழ்ப்பாணம், கிளி நொச்சி கடற்படை முகாம் களில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள 171 விசைப்படகுகள் பராமரிப்பின்றி உள்ளதால் திரும்பப் பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ளது. எனவே இலங்கையில் சேத மடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கடந்த ஜுலை 20 ராமேசுவரத்தில் நடைபெற்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர் பிரதிநிதிகளின் கூட்டத் தில் கோரிக்கை தீர்மானம் நிறை வேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner