எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 29--- அமெரிக் காவில் நீதிமன்றம் விதித்துள்ள கெடு தேதிக்குப் பிறகும் பெற் றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட சுமார் 700 சிறுவர்கள், அவர் களிடம் திரும்ப ஒப்படைக்கப் படவில்லை என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக வந்த அகதிகளி டமிருந்து பிரிக்கப்பட்ட அவர் களது குழந்தைகள் அனைவ ரையும், உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்குள் ஒப்படைக்க வேண் டும் என்று கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றம் அமெரிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இது குறித்து நீதிமன்றத்திடம் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட் டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:

அகதிகளிடமிருந்து அவர் களது குழந்தைகளை பிரிக்கும் நடைமுறையைக் கைவிடுவ தாக அதிபர் டிரம்ப் அறிவித் துள்ளதையடுத்து, இதுவரை அய்ந்து மற்றும் அதற்கு மேல் வயதுள்ள 1,442 சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, மேலும் 378 சிறுவர்கள் அவர்களது பெற் றோரிடம் ஒப்படைக்கப்படுவ தற்காக, காப்பகங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், இன்னும் 700 சிறுவர்கள் தொடர்ந்து அகதி சிறுவர்கள் காப்பகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், தங்க ளது உறவுமுறையை நிரூபிப் பதற்கான ஆவணங்களை சமர்ப் பிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களை விடுவிக்க முடியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக தஞ்சம் புகுவதற்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த கடுமையான கொள்கைக்குப் பிறகு, எல்லை தாண்டி வரும் பெற்றோர்களிடமிருந்து குழந் தைகளையும், சிறுவர்களையும் பிரித்து தனியாக அடைத்து வைக்கும் நடைமுறை தீவிரப் படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், கம்பிகளுக் குப் பின்னால் அகதி சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ள காட்சிக ளும், அகதி குழந்தைகள் தங் களது பெற்றோருக்காக ஏங்கி அழும் உருக்கமான ஒலிப்பதி வுகளும் இணையதளங்களில் வெளியாகின.

இது, உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற் படுத்திதையடுத்து, சர்ச்சைக் குரிய அந்த நடைமுறையைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner