எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

டோக்கியோ, ஜூலை 29- உலகின் மிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானின் சியோ மியாகோ, மரணமடைந்ததாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

117 வயதாகும் மியாகோ, கடந்த 1901-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி பிறந்தவர். தெற்கு ஜப்பானைச் சேர்ந்த நபி தஜிமா தனது 117-ஆவது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் மறைந்ததைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான நபர் என்ற பட்டம் மியாகோவுக்கு வழங்கப் பட்டது.

இதுகுறித்து கின்னஸ் உலக சாத னைப் புத்தக வெளியீட்டாளர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளதாவது:

உலகின் மிக வயதான நபர் என்ற சாதனையை படைத்திருந்த சியோ மியாகோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்தார்.

உடல் நிலை குன்றியிருந்த நேரத்தி லும் அவர் விடாமல் பேசிக் கொண்டி ருந்தார் எனவும், கடைசி வரை பிறரி டம் மிக அன்புடன் நடந்து கொண்ட தாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மியாகோவுக்கு அடுத்தபடியாக, உலகின் மிக வயதான நபர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளவர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப் பிடப் பட்டுள்ளது.

தற்போது ஜப்பானின் தெற்குப் பகுதியில் வசிக்கும் கனே தனாகா என்ற 115 வயது மூதாட்டிதான் உலகின் மிக வயதான நபராக அடுத்தபடியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் மிக வயதான ஆண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ள ஜப்பானைச் சேர்ந்த மசாஸா நொனாகா, கடந்த புதன்கிழமை தனது 113-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பி டத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner