எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஜூலை 30- தமிழகத் தின் சிவகாசியை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யத் துரை. தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு சென்ற அய்யாத்துரை, சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணி யாற்றி வருகிறார். மேலும், அங்கு தற்போது முன்னணி தொழில் முனைவராக உள்ளார்.

இ-மெயில் அனுப்பும் தொழில்நுட்பத்தை அய்யாத் துரை கண்டுபிடித்தாலும், அதற் கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்பட்டது. இன ரீதியான பாகுபாடே காரணம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், மாசாசூ செட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு நடக்க உள்ள தேர்தலில் அவர் சுயேச் சையாக போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் அவர் போட்டியிடுவார் என முன்னர் கூறப்பட்ட நிலையில், அவர் தனித்து களமிறங்கியுள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பா ளரும் தற்போதைய செனட் உறுப்பினருமான எலிசபெத் வாரென்-அய் எதிர்த்து அவர் தேர்தலில் நிற்கிறார். இந்நிலை யில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகர் மன்ற பகுதி

யில் அவர் சிறிய ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த எலிசபெத் வாரென்னின் ஆதார வாளர், சிவா அய்யத்துரையி டம் கடும் வாக்குவாதம் செய் தார். அவரை இனவாத சொற் கள் கூறி திட்டிய அந்த நபர், ஒலிபெருக்கியை கையால் தள் ளினார். இதனால், ஒலி பெருக்கி சிவா அய்யாத்துரையின் முகத் தில் பலமாக தாக்கியது.

இதனை அடுத்து, அங்கி ருந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner