எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாஸ்கோ, ஜூலை 30- ரசியாவில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பை உயர்த்தும் அந்த நாட்டு அரசின் சர்சைக்குரிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் ஆயிரக்கணக் கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தலைநகர் மாஸ்கோ வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மட்டும் 1 லட்சம் பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர் கள் தெரிவித்தனர். தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக் கப்பட்டுள்ள அந்த திட்ட மசோதாவின்படி, பெண்கள் ஓய்வு பெறும் வயது 55-லிருந்து 63-ஆகவும், ஆண்கள் வயது வரம்பு 60-லிருந்து 65-ஆகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்ட அறிவிப் புக்குப் பிறகு, அதிபர் புதி னுக்கு இருந்த செல்வாக்கு 80 சதவீதத்திலிருந்து 64 சதவீதமா கக் குறைந்துவிட்டதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner