எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஜூலை 30- பாகிஸ் தான் தேர்தலின்போது மேற் கொள்ளப்பட்ட சில நடவடிக் கைகள், தேர்தல் நியாயமாக நடைபெறும் நோக்கத்துக்கு எதிராக இருந்ததாக அமெ ரிக்கா விமர்சித்துள்ளது.

அந்தத் தேர்தலில் முன் னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ் தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு ஆதரவாக ராணுவம் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் கூறியதாவது:

பாகிஸ்தானின் நீண்ட கால நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு, சிறந்த மக்க ளாட்சி மிகவும் இன்றியமை யாதது ஆகும்.

ஆனால், இதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ள கருத்தை அமெரிக்கா ஆதரிக் கிறது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது கருத்து சுதந்திரத்தை நசுக்கியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள், அந்தத் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுட னும் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துக்கு எதிராக அமைந்துள்ளன.

பாகிஸ்தான் தேர்தலை பார்வையிட்ட அய்ரோப்பிய யூனியன் பார்வையாளர் அமைப்பு, தேர்தலை நியாயமான முறை யில் நடத்துவதற்காக மேற் கொள்ளப்பட்ட மாற்றங்க ளைப் பற்றி அறிக்கை தந்துள் ளது. அதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொள்கிறது.

எனினும், அந்த முன்னேற்ற நடவடிக்கைகளை கருத்து சுதந்திரத்தைப் பறித்தது, தேர் தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனைவருக்கும் சம வாய்ப்பை மறுத்தது போன்ற நடவடிக் கைகள் புறந்தள்ளிவிட்டன.

அமெரிக்காவைப் பொருத் தவரை, பாகிஸ்தானில் நிலைத் தன்மையையும், வளர்ச்சியை யும் ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டில் அமையும் அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்றார் அவர்.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner