எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஜூலை 31- பாகிஸ்தான் நாடாளுன்றத்துக்கு கடந்த 25ஆ-ம் தேதி நடந்த தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற் றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முசு லிம் லீக் கட்சி 64 தொகுதிகளி லும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலை மையிலான பாகிஸ்தான் மக் கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முத்தாஹிதா மஜ்லிஸ் அமல் வேட்பாளர்கள் 12 இடங்களி லும், பாகிஸ்தான் முசுலிம் லீக் (காயிதே ஆஸம் பிரிவு), பலூ சிஸ்தான் தேசிய கட்சி, பாகிஸ் தான் முத்தாஹிதா குவாமி இயக்கம், பலூசிஸ்தான் அவாமி கட்சி, அவாமி தேசிய கட்சி, அவாமி முஸ்லிம்  லீக், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் சானியத் மற்றும் ஜம்ஹூரி வட்டான் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வென்றுள் ளனர். ஆக உதிரி கட்சிகளிடம் தற்போது 20 எம்.பி.க்கள் உள் ளனர். இதுதவிர 14 தொகுதி களில் சுயேட்சை வேட்பாளர் கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட 137 எம்.பி.க் களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற வகையில் கூட்டணி அரசு அமைக்க இம்ரான் கான் கடந்த இருநாட்களாக சில தலைவர்களுடன் மும்முரமாக பேசி வருகிறார். இதற்கிடையில், 5 நாடாளு மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான், அவை அய்ந்திலுமே வெற்றி பெற்றுள் ளார். இம்ரான் கட்சியின் சார் பில் கைபர் பக்துங்கவா மாகா ணத்தின் முதல் அமைச்சராக முன்னர் பொறுப்பேற்றிருந்த பர்வேஸ் கட்டாக் என்பவர் இந்த தேர்தலில் நாடாளுமன் றத்துக்கும் கைபர் பக்துங்கவா சட்டசபைக்கும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி  பெற்று உள்ளார்.

இதுமட்டுமின்றி, கைபர் பக்துங்கவா மாகாணத்தில் 66 தொகுதிகளில் வெற்றி பெற் றுள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. முதல் அமைச்சராக பர்வேஸ் கட்டாக்-கை மீண்டும் நியமிக்க இம் ரான் கான் தீர்மானித்துள்ளார்.

பாகிஸ்தான் முசுலிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் சவுத்ரியை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான் கட்சி வேட்பாளரான குலாம் சர்வார் கான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றது டன் மேலும் ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் வென்றுள்ளார்.

எந்த நிலையிலும், பாகிஸ் தான் முசுலிம் லீக் அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவை நாட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள இம்ரான் கான் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடு பட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றிபெற்ற 14 எம்.பி.க்களிடமும் அவர் ஆதரவு கேட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ஆ-ம் தேதிக்குள் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்று விடுவார் என தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் மேலிட தலைவர் நயீனுல் ஹக் குறிப் பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner