எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஆக. 1- அமெரிக்கா வில் எதிர்க்கட்சியான ஜனநாய கக் கட்சியின் தேசியக் குழு வுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா என்பவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனத்தின் போது கட்சியினரிடையே சீமா பேசியதா வது:

அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின் கீழ் அமெரிக்க மக் கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர் களை மீண்டும் சரியான பாதை யில் வழிநடத்தி, அமெரிக்கர் களின் நன்மதிப்பை உலக மக் களிடையே உயரச் செய்வதே ஜனநாயகக் கட்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக சரியான முறை யில் திட்டமிட்டு, நாள்தோறும் இலக்குகளை வகுத்துக் கொண்டு, கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கட்சியின் அனைத்து வித மான நடவடிக்கைகளையும் சரி யான முறையில் மேற்பார்வை யிட்டு, கட்சியினரை ஒருங்கே வழிநடத்தி, வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக் காலத் தேர்தலில், நாடு முழு வதும் உள்ள 50 மாகாணங் களிலும் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறச் செய்ய அயராது உழைக்க இருக்கிறேன் என்று சீமா தெரிவித்தார்.

இதற்கு முன்பு சீமா, நீதித் துறையின் மனித உரிமைகள் பிரிவில் பணியாற்றி வந்தார். அமெரிக்காவில் குடியரசுக் கட் சிக்கோ அல்லது ஜனநாயகக் கட்சிக்கோ தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சீமா நந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்க அரசி யலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பங்கு பெறுவ தும், முக்கியமாக இந்திய வம் சாவளிப் பெண்களின் அரசியல் ஈடுபாடு அதிகரித்து வருவதும் உற்றுநோக்கத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner