எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இசுலாமாபாத், ஆக. 1- வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பாகிஸ் தான் பிரதமராக பதவியேற் பேன் என்று தெஹ்ரீக்-ஏ-இன் சாஃப் கட்சி (பிடிஅய்) தலை வர் இம்ரான் கான் (65) தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பாகிஸ்தான் வானொலி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம் ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உரு வெடுத்ததது. இந்த கட்சிக்கு 116 இடங்களும், பாகிஸ்தான் முசுலீம் லீக் (நவாஸ்) (பிஎம் எல்-என்) கட்சிக்கு 64 இடங்க ளும், பாகிஸ்தான் மக்கள் கட் சிக்கு (பிபிபி) 43 இடங்களும் கிடைத்தன.

இம்ரான் கான் கட்சி அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும் அவர் ஆட்சி அமைக்க மேலும் 22 இடங்கள் தேவைப்பட்டது.

இதையடுத்து, தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி, பிற கட்சி மற்றும் சுயேச்சை உறுப்பினர் களின் ஆதரவை பெறும் வகை யில் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டது. இந்த நிலையில், இம் ரான் கான் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேன் என்று தெரிவித் துள்ளதாக அந்நாட்டு வானொலி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

கைபர் பக்துன்கவா மாகா ணத்துக்கு நடைபெற்ற தேர்த லில் இம்ரான் கான் கட்சியே அதிக இடங்களைப் பிடித்துள் ளது. இந்தநிலையில், அங்கு ஆட்சியமைக்கவுள்ள பிடிஅய் கட்சி உறுப்பினர்களிடம் அவர் உரையாற்றியதாவது: கைபர் பக்துன்கவா மாகாண முதல் வரை அடுத்த 48 மணி நேரத் தில் முடிவு செய்து அறிவிப் பேன். இந்த விஷயத்தில் பொது மக்கள் அதிகம் நேசிக்கும் ஒரு வரையே நான் முதல்வர் பத விக்கு தேர்ந்தெடுக்கவுள்ளேன் என்றார் அவர்.

கைபர் பக்துன்குவா மாகா ணத்தில் பிடிஅய் கட்சி மூன் றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 99 இடங்களில், அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் 65 இடங்களில் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner