எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஹராரே, ஆக. 1- ஜிம்பாப்வே யில் வரலாற்று சிறப்பு மிக்க பொதுத் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் அதி பர் ராபர்ட் முகாபே போட்டியி டாமல் ஜிம்பாப்வேயில் தேர் தல் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பி டத்தக்கது.

பிரிட்டனிடமிருந்து ஜிம் பாப்வே கடந்த 1980-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அப்போது முதல் அந்த நாட்டின் அதிபராக கோலோச்சி வந்தவர் ராபர்ட் முகாபே (93). வயது முதிர்ச் சியின் காரணமாக அவர் பதவி விலகுவதாகக் கூறப்பட்ட நிலை யில், துணை அதிபர் இம்மர் ஸன் நாங்கக்வாவை முகாபே பதவியிலிருந்து அகற் றினார். தனது 52 வயது மனை வியை அடுத்த அதிபராக்குவதற்கா கவே அந்த நடவடிக்கை எடுக் கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய ராணுவ தலை மைத் தளபதி கான்ஸ்டன்டினோ வையும் கைது செய்ய முகாபே உத்தரவிட்டார். இந்தச் சூழ லில், கான்ஸ்டன்டினோவின் உத்தரவின் பேரில் ராபர்ட் முகா பேயின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

அதன் தொடர்ச்சியாக, முகாபே தனது பதவியிலிருந்து விலகினார்.  அதனைத்தொடர்ந்து, முகாபே பதவியிலிருந்து நீக் கிய முன்னாள் துணை அதிபர் இம்மர்ஸன் நாங்கக்வா புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ராணுவ தலைமைத் தளபதி பதவியிலி ருந்து ஓய்வு பெற்ற கான்ஸ்டன் டினோவும், முகாபே அரசில் பாதுகாப்புத் துறை அமைச்ச ராக இருந்த கெம்போ மொஹா தியும் துணை அதிபர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், ஜூலை 30-ஆம் தேதி ஜிம்பாப்வேயில் பொதுத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணை யம் அறிவித்திருந்தது. முகாபே போட்டியிடாத இந்த வர லாற்று சிறப்பு மிக்க தேர்தலை கண்காணிக்க ஏராளமான பார் வையாளர்களையும் அய்ரோப் பிய யூனியன் அனுப்பியது.

ஊழல் புகரால் பதவி நீக் கம் செய்யப்பட்ட முகாபே வுக்கு பதிலாக இந்த தேர்தலில் இம்மர்சன் நாங்காக்வா போட் டியிட்டார். அவரை அதிபராக தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கள்கிழமை அமைதியாக நடைபெற்றது.

ஹராரேவின் ஹைபீல்டு மாவட்டத்தில் பள்ளியொன் றில் அமைக்கப்பட்டிருந்த வாக் குச் சாவடிக்கு முகாபே தனது மனைவி கிரேஸுடன் வந்து ஓட்டளித்தார். ஆனால் தேர்தல் குறித்து கருத்து எதையும் கூற அவர் மறுத்துவிட்டார்.

எனினும், ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இந்த பொதுத் தேர் தலில் முகாபே, எதிர்கட்சியான எம்டிசி-க்கு வாக்களித்திருக்க லாம் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தலில் தேர்தல் முடி வுகள் ஏற்கெனவே நிர்ணயிக் கப்பட்ட ஒன்று என எம்டிசி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner