எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அபுதாபி, ஆக. 2- அய்க்கிய அரபு அமீரகத் தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது:-

அமீரகத்தில் விசா காலாவதியாகி சட்ட விரோதமாக பல நாட்கள் தங்கி இருக்கும் வெளிநாட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்க அமீரக அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுமன்னிப்பு நேற்று (1.8.2018) தொடங்கி 3 மாதம் அமலில் இருக்கும். இந்த 3 மாதங்க ளுக்குள் அமீரகத்தில் சட்ட விரோதமாக வசிப்பவர்கள் தாங்களாக முன் வந்து பொது மன்னிப்பை பெற்று வெளியே றலாம்.

இந்த திட்டத்தின் கீழ் ‘அப்ஸ்கான் டிங்’ எனப்படும் நிறுவனங்களால் தலை மறைவானவர் என்று பதிவு செய்யப் பட்ட நிலையில் (ஸ்டேட்டஸ்) உள்ள வர்கள் குடியுரிமை அலுவலகங்களில் 500 திர்ஹாம் கட்டணம் செலுத்தி தங் கள் நிலையை மாற்றிக்கொள்ளலாம்.

இந்த நிலையை மாற்றிக்கொண்டால் தொடர்ந்து அவரது விசாக்காலம் வரை அமீரகத்தில் தங்க அனுமதிக்கப்படு வார்கள். இதில் இவர்கள் மீதுள்ள பய ணத்தடையும் நீக்கம் செய்து தரப்படும்.

அமீரகத்தில் வசித்து கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை தவறவிட் டவர் அல்லது காலாவதியான நிலை யில் கடவுச்சீட்டு வைத்துள்ளவர்கள் தங்கள் நாட்டின் தூதரகம் அல்லது துணைத்தூதரகத்திடம் விண்ணப்பித்து வெளியேறும் அனுமதி கடிதம் (அவுட் பாஸ்) பெற வேண்டும். அந்த கடிதம் பெறுவதற்கு தூதரகங்கள் அல்லது துணைத்தூதரகங்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும்.

அவர்களுக்கு அடுத்த 10 நாட்களில் பயணத்தடை இல்லாமல் வெளியேறு வதற்கான அனுமதி (எக்சிட் பர்மிட்) வழங்கப்படும். இதில் அந்த அனுமதி கடிதம் பெறுவதற்கு பல்வேறு நாட்டு தூதரகங்கள் சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளது.

இந்திய தூதரகம் பொது மன்னிப்பு பெற்று பண வசதி இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக அனு மதி கடிதம்  மற்றும் விமான டிக்கெட் டுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் அவசர காலத்தில் வழங்கப்படும் சான்றிதழ்களும் உடன டியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தூதரகத்தின் இந்திய சமூக நல நிதியில் இருந்து செலவிடப் படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner