எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

கான்பெரா, ஆக. 2- சமூக வலை தளங்களின் ஆதிக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. நன்மைகள் மட்டுமன்றி தீமை களும் அதிக அளவில் சமூக வலைதளங்கள் மூலம் நிகழ் கிறது. இதனை கட்டுப்படுத்த இளைஞர்கள் சமூக வலை தளங்கள் மற்றும் அவற்றில் கிடைக்கும் நண்பர்கள் குறித்து விழிப்புணர்வுடனும், பாது காப்புடனும் இருக்க வேண்டி யது அவசியமாகிறது. விழிப் புணர்வு இல்லாமல், பாதுகாப் பற்ற செயலியால் ஏற்பட்ட நட்பு, இந்திய மாணவர் ஒரு வரை பலி வாங்கி உள்ளது.

மவுலின் ரதோட் என்ற இந்திய மாணவர் படிப்பதற் காக 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் கிடைத்த பெண் தோழி ஜாமீ லீ என்பவரை சந்திக்க முதன்முறையாக அவ ரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது சிறிதும் எதிர் பார்க்காமல், ஜாமீ லீ, மவுலின் ரதோட்டை மிக மோசமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் ரதோட் உயி ருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை தாக்கிய குற் றத்துக்காக ஜாமீ கைது செய் யப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரதோட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் அந்த பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

கல்வியில் முன்னேறுவதற் காக ஆஸ்திரேலியா சென்று, தனது உயிரை விட்ட ரதோட்டை எண்ணி அவரது குடும்பத்தினரும், நண்பர்க ளும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner