எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஆக. 3- ஈரான் அதிபர் ஹசன் ரஹானியை நேரில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், ஈரானுக்கு எதிரான தனது கடுமையான தொனியை அவர் மென்மையாக்கியுள்ளதாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து, வெள்ளை மாளி கைக்கு வருகை தந்திருந்த இத்தாலிய பிரதமர் ஜினசப்பே கான்டேவுடன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது:

இருதரப்பு பேச்சுவார்த்தையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

எனவே, ஈரான் அதிபர் ஹசன் ரஹானி விரும்பினால் அவரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன்.

ஆனால், என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் அரசு ஆயத்தமாக இருக் கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.

ஈரானுடன் முந்தைய அமெரிக்க அரசு மேற்கொண்ட கேலிக்கூத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை நான் ரத்து செய்துவிட்டதால், அவர்கள் என்னைச் சந்திக்க விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும், நான் அவர்களை எப்போது வேண்டுமானா லும் நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன். ஒரு நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை நமது பலமா கவோ, அல்லது பலவீனமாகவோ நான் கருதவில்லை.

பேச்சுவார்த்தை மூலம் இரு தரப் பினரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்தை உருவாக்க முடியுமென்றால், அதை முயற்சித்துப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அதிபர் ஹசன் ரஹானியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக எந்த வித முன் நிபந்தனையும் விதிக்க மாட்டேன். அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போதே பேச்சுவார்த்தைக்கு வரு வேன். அத்தகைய சந்திப்பு ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மட்டுமன்றி, இந்த உலகுக்கே நன்மை பயக்கும் என்றார் டிரம்ப்.

அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஈரான் தலைவர்கள் பேசினால், அதற்கு அந்த நாடு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று கடந்த வாரம் எச்சரித்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் எதிர் நட வடிக்கையால், வரலாற்றில் மிகச் சில நாடுகளே சந்தித்திருக்கக் கூடிய மிகப் பெரிய அழிவை ஈரான் சந்திக்க வேண் டியிருக்கும் என்று கூறியிருந்தார்.

இவ்வாறு ஈரான் மீது பேரழிப் போர் குறித்து டிரம்ப் மறைமுகமாக மிரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், தற்போது ஈரானுக்கு எதிரான தனது தொனியை டிரம்ப் மென்மையாக்கியுள்ளது குறிப்பிடத்தக் கது. தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெ ரிக்கா, ரசியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.

ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கப் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்று விமர்சித்து வந்த டிரம்ப், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக இந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.

இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ள பிற நாடுகளான ரசியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner