எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஆக.4 பாகிஸ் தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்கும் விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ் தான் தெஹ்ரீக்இஇன்சாப் (பி.டி.அய்.) கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது.

தேர்தலில் மோசடிகள் நடை பெற்று இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்த போதி லும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முசுலிம் லீக் கட்சி (நவாஸ்) தனது தோல்வியை ஒப்புக்கொண்டது.

இது குறித்து நவாஸ் ஷெரீப் பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிடுகையில் தங்களது கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என கூறினார்.

எனவே இம்ரான்கான் ஆட்சி அமைப்பதற்கான வழி பிறந்தது. ஆட்சி அமைப்பது தொடர்பாக இம்ரான் கான் தனது கட்சியின் மூத்த தலை வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இம்ரான்கான் கட்சி கூட்டணி அரசு அமைக்கிறது. இசுலாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் 11ஆம் தேதி நடக்கிற எளிய விழாவில் இம்ரான்கான், அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலில் இந்த விழாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட வெளிநாட்டு தலை வர்கள், இந்தி திரையுலக நட்சத் திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை அழைப்பதற்கு இம் ரான்கான் கட்சி திட்டமிட்டது.

ஆனால் ஆடம்பர விழா நடத்துவதற்கு இம்ரான்கான் விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவுக்கு வெளி நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என்று அக் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner