எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

வாசிங்டன், ஆக.4 ரசியாவுடன் பாதுகாப்பு துறை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற் கொள் ளும் நாடுகள் மீதும் பொருளா தார தடை விதிக்கப்படும் என்ற கட்டுப்பாட்டில் இருந்து இந்தி யாவுக்கு விலக்கு அளிக்கும் விதிகள் அடங்கிய மசோதா விற்கு அமெரிக்க எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது.

இதையடுத்து, இந்த மசோ தாவுக்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு, அது சட்டமாக மாறும்.

ரசியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித் துள்ளது. அந்நாட்டுடன் பாது காப்பு துறை சார்ந்த வர்த்தகம் மேற்கொள்ளும் பிற நாடுகளு டன், அமெரிக்கா பாதுகாப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேற் கொள்ளாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, அமெரிக்கா ஏற்கெனவே சட்டம் இயற்றியிருந்தது.

இதற்கிடையே, ரசியா விடம் இருந்து ரூ.30,000 கோடி மதிப்பில் எஸ்-400 என்ற வகையிலான 5 ஏவுதள பாதுகாப்பு சாதனங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர் பான ஒப்பந்தம் இறுதி நிலை யை எட்டியுள்ளது.

இந்நிலையில், அமெரிக் காவின் நெருங்கிய நட்பு நாடு களுக்கு, ரசியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள விதிக்கப்பட் டிருந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையி லான சட்டத்திருத்த மசோதா வுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்தனர்.

இந்த மசோதா மீது கடந்த வாரம் வாக்கெடுப்பு நடை பெற்ற போது 87 பேர் ஆதர வாகவும், 10 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் முன் னாள் மூத்த அதிகாரி ஜோசுவா ஒய்ட் கூறுகையில், அமெரிக்க எம்.பி.க்கள் நிறைவேற்றியுள்ள விதிவிலக்கு மசோதா என்பது 2019-இல் இந்தியாவுக்கு பயன ளிக்கும்'' என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner