எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

 

வாசிங்டன், ஆக.4 பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியை ரூ.1,020 கோடியாக குறைப்பதற்கான மசோதா நிறைவேறியது.

அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு போரில், அந்த நாட்டின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதன் காரணமாக பயங்கரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது.

முந்தைய ஒபாமா ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானுக்கு, பாகிஸ்தானுடனான மேம்படுத்தப்பட்ட கூட்டு சட்டம் 2009இன் படி (கெர்ரி-லுகார்- பெர்மன் சட்டம்) அமெரிக்கா ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,160 கோடி) நிதி உதவி அளித்து வந்தது.

ஆனால் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி டிரம்ப், அதிபராக பதவி ஏற்ற பிறகு, பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் முக்கிய மாற்றம் வந்தது.

பயங்கரவாத ஒழிப்புக்காக அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் நிதி உதவி பெற்றுக்கொண்டு, தன் சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

பாகிஸ்தான் தன் நாட்டில் உள்ள ஹக்கானி வலைச்சமூகம், தலீபான் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள்மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. ஆனால் பாகிஸ்தான் அதை காதில் போட்டுக்கொள்ளவும் இல்லை. குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை.

இதன் காரணமாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு நிதி உதவி 1.15 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7,820 கோடி) அமெரிக்கா நிறுத்தி வைத்தது. அது மட்டுமின்றி பாகிஸ்தானுடனான சீனாவின் தொடர்புக்கு எதிராகவும் அமெரிக்கா குரல் கொடுத்து வந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு செலவுகளை ஈடுசெய்து வழங்குகிற நிதியை வெறும் 150 மில்லியன் டாலராக (சுமார் ரூ.1,020 கோடி) குறைத்து, அதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நிறைவேறியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner