எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஹராரே, ஆக. 5- ஜிம்பாப்வே யில் திங்கள்கிழமை நடை பெற்ற பொதுத் தேர்தலில் அதி பர் எமர்சன் நங்கக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தேர்தலிலும் முறை கேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி, எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவை புறக்கணிப் பதாக அறிவித்துள்ளன.

ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்றதிலிருந்து அந்த நாட்டை ஆண்டு வந்த ராபர்ட் முகாபே, ஊழல் புகார் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி விலகினார். அவருக்கு அடுத்தபடியாக, முன்னாள் துணை அதிபர் எமர்சன் நங்கக்வா அதிபர் பொறுப்பை ஏற்றார்.

இந்த நிலையில், ஜிம்பாப் வேயில் முகாபே போட்டியிடாமல் முதல் முறையாக கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.

முகாபே ஆட்சிக் காலத்தின் போது நடைபெற்ற தேர்தல் களில் முறைகேடுகளும், வன் முறையும் தலைவிரித்தாடிய தாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல் அதற்கு மாற் றாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

எனினும், திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் அமைதி யாக நடந்தாலும், அதில் முறை கேடுகள் நடைபெற்றதாகக் கூறி எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத் திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அதை யடுத்து, வன்முறையைக் கட் டுப்படுத்த முக்கிய பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தேர்தலில் அதிபர் எமர்சன் நங்கக்வா 50.8 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக வெள்ளிக் கிழமை அறிவிக்கப்பட்டது.

அவருக்கு அடுத்தபடியாக, எதிர்க்கட்சித் தலைவர் நெல் சன் சமிஸா 44.3 சதவீத வாக் குகளைப் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிபர் எமர்சன் நங் கக்வா, தனக்கு வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்ப தாகக் கூறினார். ஜிம்பாப்வே யில் அமைதி, ஒற்றுமை, அன்பு ஆகியவற்றை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒருங் கிணைந்து பாடுபடவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண் டார்.

எனினும், முறைகேடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் முடிவை புறக்கணிப் பதாக எதிர்க்கட்சிகள் அறிவித் துள்ளன.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொட ரவிருப்பதாகவும் அவை அறிவித்துள்ளன.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner