எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

இசுலாமாபாத், ஆக. 5- பாகிஸ் தானில் பெண்களுக்கான பள் ளிகளுக்கு தீ வைக்கப்பட்டதன் காரணம், பெண்களின் கைக ளில் புத்தகம் இருப்பது பயங்க ரவாதிகளுக்கு அச்சத்தை ஏற் படுத்தியுள்ளதாக மலாலா தெரி வித்துள்ளார்.

பாகிஸ்தானின் கில்கித் மற்றும் பல்திஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள 12 பள்ளிகளிகளுக்கு வெள்ளிக் கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மகளிர் பள்ளிகளாகும். ஆனால், தாக்யா எனுமிடத்தில் உள்ள பள்ளியில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக அப்பகுதி பத்திரி கையாளர்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 2 பள்ளிகளை வெடி குண்டு வைத்து தகர்க்க முயற் சிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட் டுள்ளதாகவும், அதில் சில பள்ளிகளில் புத்தகங்களுக்கும் தீ வைத்துள்ளதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த தீ வைப்பு சம்பவத் துக்கு எந்த அமைப்பும் இது வரை உரிமை கோரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்த னர்.

இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மலாலா கடும் கண்டனம் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் கூறிய தாவது:

பெண்கள் கைகளில் புத்தகம் இருப்பதும், அவர்கள் படிப்பதும் பயங்கரவாதிகளை அச்சமடையச் செய்துள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் உட னடியாக புதிதாக கட்டப்பட வேண்டும். அதில் பயின்ற அனைத்து மாணவிகளும் சம் பந்தப்பட்ட வகுப்புகளுக்கு மீண்டும் செல்ல வேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு பெண் களும் தங்கள் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner