எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காபூல், ஆக. 5- உலகையே பயங்கரவாதம் எனும் சொல் லால் அச்சுறுத்திய ஒசாமா பின் லேடன், சிறு வயதில் நல்லக் குழந்தையாகவே இருந்ததாக அவரது தாய் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் நாளிதழான கார் டியனுக்கு ஒசாமா பின் லேட னின் தாய் அலியா கானெம் அளித்த பேட்டிதான், முதன் முதலாக வெளி உலகுக்கு ஒசா மாவின் தாயாக அவரை அடை யாளம் காட்டியுள்ளது.

மற்றக் குழந்தைகளைப் போலவே ஒசாமாவும் நல்ல சிறுவனாகவே வளர்ந்து வந் தான். மற்றவர்களுடன் பழக வும் பேசவும் கூச்சப்படுவான். பள்ளிக் காலம் வரை நல்ல வனாகவே இருந்தான். ஜெட் டாவில் உள்ள கிங் அப்துல் லாஸிஸ் பல்கலையில்தான் அவன் மூளைச்சலவை செய் யப்பட்டான் என்று கூறுகிறார்.

மிக நல்ல இளைஞனாக இருந்த ஒசாமாவை, அவனது 20 வயதில் பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு சிலர் மிக எளிதாக மூளைச் சாயம் ஏற்றினார்கள். அப்படி செய்ததற்காக அவர்க ளுக்கு பணமும் கிடைத்தது. அவர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்குமாறு நான் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப் பேன். அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் என்னிடம் சொல்லவே மாட்டான். நான் வருத்தப் படுவேன் என்று நினைத்திருக் கலாம். என்னை அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

கடைசியாக ஒசாமா பின் லேடனை 1999ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த போதுதான் பார்த்தோம். அதன் பிறகு அவனை பார்க்க முடியவில்லை என்கிறார்கள் குடும்பத்தினர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner