எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கான்பெரா, ஆக. 6- சசி செல்லையா (39), என்பவர் ஆஸ்திரேலி யாவில் குடி பெயர்ந்த இந்தியர் ஆவார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவரது பூர்வீகம் மதுரை. கடந்த 2012ஆ-ம் ஆண்டு ஆஸ்தி ரேலியாவிற்கு குடிபெயர்ந்தார்

அடிலைடைலில் உள்ள சிறைச்சாலையில் பாதுகாவலராக தற்போது பணிபுரிந்து வரும் சசி அண்மையில் ‘ஆஸ்திரேலியா மாஸ்டர் செஃப் 2018’ என்கிற சமையல் போட்டியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ஸ்டார்டர் வகை உணவாக சம்பல் இறால் எனும் உணவைச் சமைத்து, 30 புள்ளிகள் எடுத்தார். பின்னர் இறுதிச் சுற்றில் மீன் குழம் புடன் சேர்த்து சீரகச் சாதம் சமைத்து மொத்தமாக 93 புள்ளி களை எடுத்து வெற்றி பெற்று சாதனை படைத்தார். அவருடன் போட்டியிட்டு பென் என்பவர் மொத்தமாக 77 புள்ளிகள் எடுத்திருந்தார்.

மாஸ்டர் செஃப் என்ற பட்டமும், ரொக்கப் பரிசாக ஒரு கோடியே 27 லட்சம் ரூபாயும் சசி செல்லையாவுக்கு வழங் கப்பட்டது. பரிசை வென்ற அவர் இறுதிச் சுற்றில் சமைத்த உணவு தனது அத்தைக்கு பிரியமான உணவு என்றார். ட்விட்டரில் தனக்கு உற்சாகம் அளித்துவரும் தனது குடும்பத் துக்கு நன்றி கூறி பதிவிட்டிருந்தார் சசி.

அதிபர் நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு

கராகஸ், ஆக. 6- வெனிசுலா தேசிய படைகளின் 81-ஆவது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் நேற்று நடை பெற்றது. இதில், பங்கேற்ற அதிபர் மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டு வெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வெனிசுலா தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடகங்களிடம் கூறுகையில், மதுரோ உரையாற்றிய போது ஆளில்லா சிறிய விமானங்கள்(ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிபர் மதுரோ உயிர்பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த, தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ வில், ராணுவ உயரதிகாரிகள் புடைசூழ நின்றிருக்க, மனைவி யுடன் மதுரோ உரையாடிய போது குண்டுவெடிப்பு சத்தம் கேட்கிறது. பின்னர் படை வீரர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிப்பது போல் பதிவாகியுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner