எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

வாசிங்டன், ஆக. 6- அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப் பான நாசா, முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடங்கவிருக் கும் வர்த்தக ரீதியிலான விண் வெளிப் பயணத்துக்குத் தேர்ந் தெடுத்துள்ள 9 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்சும் இடம் பெற்று உள்ளார். இதுகுறித்து நாசா அதிகாரிகள் கூறியதாவது:

எதிர்காலத்தில் நாசாவின் வர்த்தக ரீதியிலான விண்வெளி ஆய்வுக் கலங்கள் அனைத்தும், ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் போயிங் ஸ்பேஸ் ஆகிய தனியார் நிறுவ னங்களுடன் இணைந்து விண் ணில் ஏவப்படும்.

அடுத்த ஆண்டின் தொடக் கத்தில், போயிங் சிஎஸ்டி-100 ஸ்டார்லைனர் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன்கேப்ஸ்யூல் மூலம் 8 நாசா விஞ்ஞானிகளும், நாசா வில் பணியாற்றிவிட்டு தற் போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரும் விண் வெளிப் பயணம் மேற்கொள் கின்றனர். இந்த 9 பேரில் சுனிதா வில்லியம்சும் ஒருவர்.

அமெரிக்கா தனது விண் வெளி ஓடத் திட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு கைவிட்டதற் குப் பிறகு, விண்ணில் மனிதர் களை அனுப்புவதற்கு பிற நாடுகளை நம்பியிருக்க வேண் டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டுக்குப் பிறகு இந்தத் திட் டத்தின் வாயிலாக அமெரிக்க மண்ணிலிருந்தே விஞ்ஞானி களை விண்வெளிக்கு அனுப்ப முடியும்.

விண்வெளி ஆய்வுத் துறை யில் அமெரிக்காவின் முன்னி லையைத் தக்கவைக்க இந்தத் திட்டம் உதவும் என்று நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner