எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிங்கப்பூர், ஆக. 6- அமெரிக்கா வைத் தனிமைப்படுத்தி சீனா வின் ஆதரவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற் கொள்வதற்கான தீவிர முயற் சியில் இறங்க வேண்டும் என்று தென் கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவுக்கும், சீனா வுக்கும் இடையிலான வர்த்த கப் போர் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அவர்கள், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி யுள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடுக ளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு, சிங் கப்பூரில் கடந்த 1-ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை நடை பெற்றது. அப்போது, சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா வும், அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் மாறி மாறி கூடு தல் இறக்குமதி வரி விதிப்ப தால்,  உலகின் இரு பெரும் பொரு ளாதார சக்திகளான அந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த் தகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநாட்டினி டையே செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சயீஃபுதீன் அப்துல்லா சனிக்கிழமை (ஆக. 5) கூறியதாவது:

அமெரிக்காவும், சீனாவும் கூடுதல் இறக்குமதி வரி விதிப் பதாக ஒருவரை ஒருவர் மிரட்டி வருவதால் எழுந்துள்ள வர்த்தகப் போர் பதற்றம், நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த் தகப் போர் வெடிக்கும் என்று கூறப்படுவது வெறும் கற்ப னையல்ல. இந்த அச்சுறுத்தல் பல நாடுகளைக் கவலையடை யச் செய்துள்ளது. இந்தப் பிரச் சினை நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner