எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஆக. 6- பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு தேர்வு செய்யப் பட்ட சலுகைகளில் இலவச எஸ்.எம்.எஸ். வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி போஸ்ட்பெயிட் சலுகைகளில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படு கிறது. எனினும் இந்த சலுகை பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதிக விலையில் கிடைக்கும் சலுகைகளுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் ரூ.399 மற்றும் அதற் கும் குறைந்த விலையில் கிடைக் கும் சலுகைகளில் குறிப்பிட்ட வேலிடிட்டிக்கு மொத்தம் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகி றது.

புதிய அறிவிப்பு ஜியோ, ஏர்டெல், வோடபோன், அய்டியா போன்ற போட்டி நிறுவனங்களை எதிர்கொள் ளும் நோக்கில் வெளியிடப் பட்டு இருக்கிறது. பி.எஸ்.என்.எல் பிரீமியம் சலுகைகளிலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படாமல் இருந்தது.

பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் சேவைகள் தற்சமயம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய மாற்றங்கள் ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் அமலாகியிருக்கிறது. அந்த வகையில் இதேபோன்ற அறிவிப்பு இந்தி யாவின் மற்ற பகுதிகளிலும் வழங்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner