எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

நான்ஜிங், ஆக. 6- உலக பாட் மிண்டன் போட்டி மகளிர் ஒற் றையர் இறுதிச் சுற்றில் இந்தி யாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி வாகையர் பட்டம் வென்றார் ஸ்பெயினின் கரோலினா மரின்.

சீனாவின் நான்ஜிங் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வரு கின்றன. இதில் சிந்து-கரோ லினா மரின் இடையிலான மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒலிம்பிக் வாகை யர் ஆன கரோலினா மரின் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.

முதல் கேமில் சிந்து கடும் சவாலை ஏற்படுத்திய நிலை யில் இருவரும் மாறி மாறி புள் ளிகளை எடுத்தனர். இறுதியில் முதல் ஆட்டத்தில் 21--19 என மரின் வென்றார். எனினும் இரண்டாவது ஆட்டத்தில் மரி னின் வேகத்திற்கு சிந்துவிடம் பதில் இல்லை. 21--10 என்ற புல்ளிக்கணக்கில் மரின் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற் றினார்.

கடந்த உலக பாட்மிண்டன் வாகையர் பட்டத் தொடரிலும் இறுதிப் போட்டி வரை முன் னேறிய சிந்து, இறுதிப்போட்டி யில் தோல்வியடைந்து வெள் ளிப்பதக்கத்தை வென்றார்.

2014, 2015, 2018 என தற் போது மூன்றாவது முறையாக மரின் வாகையர் பட்டம் வென் றுள்ளார். உலக பாட்மிண்டன் போட்டியில் 2013, 2014-இல் வெண்கலம், 2017-இல் வெள்ளி வென்ற சிந்து தற்போது மீண்டும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்த தொடரில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம், உலக பாட்மிண்டன் வாகையர் பட்டத் தொடரில் தலா 2 வெண்கலம் மற்றும் 2 வெள் ளிப்பதக்கத்தை அவர் வென் றுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner