எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, ஆக. 7- வங்கதேசத்தில் சாலைப் பாதுகாப்பை வலியு றுத்தி அந்த நாட்டு மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட் டத்தால், தலைநகர் டாக்காவின் பல்வேறு பகுதிகள் 8-ஆவது நாளாக பாதிப்படைந்துள்ளன.

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அடிக் கடி சாலை விபத்துகளைச் சந் தித்து வரும் வங்கதேசத்தில், கடந்த வாரம் நேரிட்ட பேருந்து விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர். அதையடுத்து, சாலை வசதிகளை மேம்படுத் தவும், போக்குவரத்து விதி களை அமல்படுத்தவும் வலியு றுத்தி தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 8 நாள்களாக நடந்து வரும் இந்தப் போராட்டத்தால் அந்த நகரின் பல இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது வன் முறை வெடித்தது.

மாணவர்களைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந் தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner