எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வாசிங்டன், ஆக. 7- கடந்த 2016ஆ-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ் யாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலை யில் இதுபற்றி அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர் தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தும் நோக்கில் அவருக்கு எதிரான தகவல்களை பெரு வதற்காக டொனால்ட் ட்ரம் பிற்கு சொந்தமான ட்ரம்ப் டவரில் ரசியாவை சேர்ந்த பெண் வழக்குரைஞரை ட்ரம் பின் மூத்த மகன், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் சந்தித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளி தழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், இந்த குற்றச் சாட்டிற்கு ட்ரம்ப் மற்றும் அவரது மகன் ஆகிய இரு வரும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர். எனி னும், இது தொடர்பான விசா ரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தனது மகன் சட்ட ரீதியிலான அபாயத்தில் சிக்கி யிருப்பதை நினைத்து அதிபர் ட்ரம்ப் கவலையில் இருப்ப தாக அமெரிக்க ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட் டன.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ரசிய வழக்குரைஞருடனான தனது மகனின் சந்திப்பை ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-

தனது மகன் சட்ட ரீதியி லான அபாயத்தில் இருப் பதை நினைத்து தான் வருந் துவதாக வெளியான செய்தி கள் முழுக்க கற்பனையானது. தேர்தலில் எதிரியை வீழ்த்துவ தற்காக எதிரியை பற்றிய தக வலை அடுத்தவர்களிடம் பெறு வது சட்டப்பூர்வமான ஒன்று தான். அரசியலில் எல்லா நேரங்களில் இது போன்று நடைபெற்று வந்துள்ளது. ஆனால், அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

முதலில் ரசிய வழக்குரை ஞருடனான தனது மகனின் சந்திப்பை ட்ரம்ப் மறுத்து வந்த நிலையில் தற்போது அதை ஒப்புக்கொள்வது போன்ற கருத்து தெரிவித்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner