எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஆக. 10- அமெரிக்கா வில் உள்ள வர்ஜீனியா பல் கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர், ஆதித்ய பம்ஜாய். இந்தியர். இவர் சட்ட நிபுணரும் ஆவார்.

இவர் வர்ஜீனியா பல் கலைக்கழக சட்டக்கல்லூரியில் உரிமையியல் நடைமுறை சட்டம், நிர்வாக சட்டம், மத்திய நீதிமன்றங்கள், தேசிய பாதுகாப்பு சட்டம், கணினி குற்றவியல் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.

இவர் ஏல் பல்கலைக்கழகத் தில் பி.ஏ. பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரி யில் சட்டப்படிப்பில் பட்ட மும் பெற்றவர். இவர் வர்ஜீ னியா பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பேராசிரியராக சேருவதற்கு முன்பாக அமெ ரிக்க நீதித்துறையில் சட்ட ஆலோசனை அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றி வந் தார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆன்டனின் ஸ்காலியாவின் உதவியாளரா கவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

இப்போது இவரை அந்த ரங்கம் மற்றும் மனித உரிமை கள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக அதிபர் டிரம்ப் நியமித்து உள்ளார். இந்தப் பத வியில் இவர் 2020ஆ-ம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி வரை இருப்பார்.

பயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற் காக அரசு நிர்வாகம் எடுக்கிற முயற்சிகளை அந்தரங்கம் மற் றும் மனித உரிமைகள் மேற் பார்வை வாரியம் உறுதிப்படுத் தும். அத்துடன் இந்த அமைப் பானது, அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக் கும் கடமையையும் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner